காசிமேடு துறைமுகத்தை நவீனப்படுத்தும் திட்டம் - தமிழக அரசுக்கு கலாநிதி வீராசாமி எம்.பி. கோரிக்கை
தமிழக சுற்றுச்சூழல் துறை செயலருக்கு வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை நவீனப்படுத்தும் திட்டத்தை விரைவுப்படுத்துவதற்கு உடனடி கவனம் செலுத்த வேண்டும் என தமிழக சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் செயலருக்கு வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கொடுக்கப்பட்ட உறுதிமொழியை நிறைவேற்ற இதுவரை எந்த முனைப்பும் காணப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதல் கிடைக்காதது தான் இதற்கு காரணம் என தெரியவந்துள்ளதால், திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.