கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஸ்கேட்டிங் செல்லும் ஆசிரியருக்கு வரவேற்பு

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஸ்கேட்டிங் செல்லும் ஆசிரியருக்கு வரவேற்பு

Update: 2022-06-06 17:46 GMT

கிருஷ்ணகிரி:

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஸ்கேட்டிங் விழிப்புணர்வு செல்லும் ஆசிரியருக்கு கிருஷ்ணகிரியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆசிரியர்

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் அனஸ் ஹாஜாஸ் (வயது 31). இவர் பீகாரில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு ஸ்கேட்டிங் மீது கொண்ட ஆர்வத்தால் பயிற்சி மேற்கொண்டு நன்றாக கற்று கொண்டார். இதையடுத்து ஸ்கேட்டிங் பற்றி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், கடந்த மாதம் 29-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு- காஷ்மீர் வரை ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளார்.

காலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை, ஒரு நாளைக்கு 100 கிலோ மீட்டர், வரை பயணம் மேற்கொள்ளும் இவர், 35 நாட்களில் இந்த பயணத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார். இரவில் தேசிய நெடுஞ்சாலையையொட்டியுள்ள இடங்களில் ஓய்வெடுக்கிறார்.

கிருஷ்ணகிரி வந்த அவர் கூறியதாவது:-

விழிப்புணர்வுக்கான பயணம்

ஸ்கேட்டிங் செய்வதால், மனது புத்துணர்ச்சி பெறுகிறது. திறமை வளர்க்கிறது. தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. உடல் நிலை மற்றும் மூளை சீராகிறது. நம் நாட்டில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சாலைகள் நன்றாக உள்ளது. எனவே ஸ்கேட்டிங் பயணம் மேற்கொள்வதும் சுலபமாக இருப்பதால், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தற்போது இப்பயணம் மேற்கொண்டுள்ளேன். காஷ்மீர் சென்ற பின் அங்கிருந்து பூடான், நேபால், கம்போடியா போன்ற வெளி நாடுகளுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவெடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர், பெங்களூரு, ஐதராபாத், நாக்பூர், மத்திய பிரதேசம், டெல்லி, பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் வரை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்