காசி விசுவநாதர் கோவில் தேரோட்டம்

தேசூர் நகரில் காசி விசுவநாதர் கோவில் தேரோட்டம் நடந்தது.

Update: 2023-05-01 16:35 GMT

சேத்துப்பட்டு

தேசூர் பேரூராட்சியில் உள்ள விசாலாட்சி தாயார் சமேத காசி விஸ்வநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 24-ந் தேதி தொடங்கியது இதைத்தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் விசாலாட்சி தாயார், காசி விஸ்வநாதர் வீதி உலா நடந்தது.

முக்கிய விழாவான தேரோட்டம் இன்று நடந்தது.

இதையொட்டி காலையில் காசி விஸ்வநாதர், விசாராட்சி தாயார், வள்ளி, தெய்வானை, முருகன், விநாயகர், நடராஜர், நாயன்மார்கள் ஆகிய மூலவர், உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் உற்சவர் விசாலாட்சி தாயார், காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அலங்காரம் செய்து திருத்தேரில் வைத்தனர். பின்னர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதில் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர்.

தேரோட்டத்தின்போது பக்தர்கள் நேர்த்திக்கடனாக நவதானியங்கள், நாணயங்கள், காய்கனி ஆகியவை தேர் மீது வீசினார்கள். இரவு கோவிலுக்கு உற்சவர் விசாலாட்சி தாயார், காசி விஸ்வநாதரை கொண்டு போய் வைத்து, சாந்தி அபிஷேகம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை சைவ வேளாளர்கள் சமூகத்தினர் செய்திருந்தனர்,


Tags:    

மேலும் செய்திகள்