விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவி

Update: 2023-05-10 16:40 GMT


விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவி வழங்கப்பட்டது.

தொழில்நுட்ப பயிற்சி

தாராபுரம் வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின்கீழ் தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளர் இளையராஜா, பேராசிரியர் ரங்கசாமி, பேராசிரியர் ரங்கசாமி ஆகியோர் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு நெற்பயிரில் உயர்விளைச்சல் ரகம் பயன்படுத்துதல், நாற்றங்கால் அமைத்தல், எந்திர நடவு, பூச்சி நோய் அறிகுறி மற்றும் உரிய மேலாண்மை மேற்கொள்ளுதல், வரப்பு பயிர் அல்லது ஊடுபயிர் சாகுபடி செய்வது குறித்து விளக்கினர்.

திருப்பூர் மாவட்ட உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்ட ஆலோசகர் அரசப்பன் தென்னை மரத்தில் உரமேலாண்மை மற்றும் பூச்சி நோய் அறிகுறிபற்றி எடுத்துக்கூறினார். வேளாண்மை உதவி இயக்குனர் லீலாவதி பண்ணைப்பள்ளியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கினார்கள்.

மானியம்

வேளாண்மை உழவர் நலத்துறையின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், கோவிந்தாபுரம் கிராமத்தில் காளிமுத்து மற்றும் அம்சவேணி, ஊத்துப்பாளையம் கிராமத்தில் சந்திரசேகர் ஆகிய விவசாயிகளுக்கு சுழல்கலப்பை மானிய விலையில் வழங்கப்பட்டது. மேலும் ஊத்துப்பாளையம் கிராமங்களில் விவசாயிகளுக்கு மானிய விலையில் தார்பாலின் மற்றும் விசைத் தெளிப்பான்களும் வழங்கப்பட்டது.

மேலும் அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு விவசாயிடையே பண்ணைக் கருவிகளின் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர். இதில் துணை வேளாண்மை அலுவலர் சின்னத்தம்பி, உதவி வேளாண்மை அலுவலர் யாஸ்மின், தொழில்நுட்ப உதவியாளர் கிருத்திகா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்