துருக்கி நாட்டை சேர்ந்த வாலிபரை காதலித்து திருமணம் செய்த கரூர் பெண்

துருக்கி நாட்டை சேர்ந்த வாலிபரை காதலித்து கரூர் பெண் தமிழ் கலாசாரப்படி திருமணம் செய்து கொண்டார்.

Update: 2023-08-21 17:28 GMT

எம்.டெக் பட்டதாரி

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகள் பிரியங்கா. பி.டெக் பட்டதாரியான இவர் டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். துருக்கி நாட்டை சேர்ந்தவர் அஹமத் ஜெமில் கயான். எம்.டெக் பட்டதாரி. இவர் டெல்லி மற்றும் துருக்கியில் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் பிரியங்காவிற்கும், அஹமத் ஜெமில் கயானுக்கும் நட்பு ஏற்பட்டது. பின்னர் இந்த நட்பு காதலாக மாறியது. இதனை தொடர்ந்து பிரியங்காவும், அஹமத் ஜெமில் கயானும் திருமணம் செய்வது குறித்து தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இந்த திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.

தமிழ் கலாசாரம்

இதனையடுத்து தமிழ் கலாசாரப்படி மணமகள் வீட்டில் திருமணம் நடத்த என முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று கரூரில் உள்ள மணமகள் பிரியங்கா வீட்டில் திருமணம் தமிழ் முறைப்படி நடைபெற்றது. அப்போது மாப்பிள்ளை அழைப்பு, தாலி கட்டுதல், கன்னி தானம் உள்ளிட்ட சடங்குகள் நடைபெற்றது. தமிழ் தெரியாத மாப்பிள்ளை வீட்டாருக்கு திருமணத்தின் ஒவ்வொரு நிகழ்வும் ஆங்கிலத்தில் விளக்கி கூறப்பட்டது. . இந்த நிகழ்ச்சிகளை துருக்கியில் இருந்து வந்த அவர்களது உறவினர்கள் ஆச்சரியத்துடன் பார்த்ததுடன் வீடியோவிலும் பதிவு செய்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்