கரூர் மாவட்ட கூட்டுறவு ஊழியர்கள் சங்க பேரவை கூட்டம்

கரூர் மாவட்ட கூட்டுறவு ஊழியர்கள் சங்க பேரவை கூட்டம் நடந்தது.

Update: 2022-09-02 18:33 GMT

கரூர் மாவட்ட கூட்டுறவு ஊழியர்கள் சங்கத்தின் (சி.ஐ.டி.யு.) ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் மாநில உதவி பொதுச்செயலாளர் கவுதமன் சிறப்புரையாற்றினார். இதில் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியின்படி நியாயவிலை கடைகளை ஒரே துறையில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் பாக்கெட் முறையை அமல்படுத்த வேண்டும்.2 ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். கூட்டுறவு நிறுவனங்கள் நடத்தும் அம்மா மருந்தகங்களில் நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும். அச்சக ஊழியர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும். வருகிற 26-ந்தேி கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் சார்பில் நடைபெறும் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடத்தவும், இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொள்ள வைப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மணியரசு, பொருளாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்