கரூர் மாநகராட்சி அவசர கூட்டம்

கரூர் மாநகராட்சி அவசர கூட்டம் நடந்தது.

Update: 2022-10-31 19:04 GMT

கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் நேற்று அவசர கூட்டம் நடைபெற்றது. இதற்கு மேயர் கவிதா கணேசன் தலைமை தாங்கினார். துணை மேயர் தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கரூர் மாநகராட்சியில் வார்டு குழு அமைக்கும் பொருட்டு மொத்தமுள்ள 48 வார்டுகளில் ஒவ்வொரு வார்டுகளையும் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, 48 வார்டுகளிலும் உருவாக்கப்பட்ட 192 பகுதி சபா உறுப்பினர்களை நியமனம் செய்ய தீர்மானம் வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்