கரூர்: இருசக்கர வாகனம் மீது தனியார் பஸ் மோதி விபத்து - 5ம் வகுப்பு மாணவன் பலி

இருசக்கர வாகனம் மீது தனியார் பஸ் மோதி விபத்துக்கு உள்ளானதில் பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-09-12 06:39 GMT

ஆத்தூர்,

கரூர், ஆத்தூர் பிரிவு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி ரம்யா. இவர்களது மகன் இளவியண் (வயது10). 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ரம்யா தனது மகனை பள்ளியில் விடுவதற்காக இருசக்கரவாகனத்தில் அழைத்து சென்றுள்ளார்.

அப்போது கரூர்- ஈரோடு நெடுஞ்சாலையில் ஆத்தூர் அருகே வந்த போது அவ்வழியாக வந்த ஜவுளி நிறுவனத்துக்கு ஆட்களை ஏற்றி செல்லும் தனியார் பஸ் ஒன்று இருசக்கரவாகனத்தில் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் மாணவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த ரம்யாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற பஸ் டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்