கருப்பணசாமி கோவில் திருவிழா

பழனி மயிலாடும்பாறையில் கருப்பணசாமி கோவில் திருவிழா நடந்தது.

Update: 2022-09-14 17:10 GMT

பழனி மயிலாடும்பாறையில் கன்னிமார் கருப்பணசாமி கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் நேற்று திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் பழனி சண்முகநதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் சுமார் 10 அடி உயர அரிவாள் எடுத்து வரப்பட்டு கோவிலில் நடப்பட்டது.

திருவிழாவையொட்டி நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனகாப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பழனி சுற்று வட்டார பகுதி மக்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும், நாளை (வெள்ளிக்கிழமை) மறுபூஜையும் நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்