கருங்கல்பாளையம்போலீஸ் நிலையத்துக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்துக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் கருங்கல்பாளையம் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள வரவேற்பாளர் அறையின் பின்புறத்தில் நேற்று காலை பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதைப்பார்த்து அங்கு நின்றிருந்த நாய் ஒன்று குரைத்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அருகில் சென்று பார்த்தனர். அப்போது பாம்பு ஒன்று போலீஸ் நிலையத்துக்குள் புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சத்தம்போட, அந்த பாம்பு அருகில் உள்ள தண்ணீர் குழாய் அருகே சென்று பதுங்கியது.
இதைத்தொடர்ந்து போலீசார், பாம்பு பிடி வீரர் யுவராஜுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த யுவராஜ், தண்ணீர் குழாய் அருகே பதுங்கியிருந்த 2 அடி நீள பாம்பினை லாவகமாக பிடித்து சிறிய பிளாஸ்டிக் கவரில் போட்டு கட்டினார். இதுகுறித்து யுவராஜ் கூறும்போது, 'பிடிபட்டது 2 அடி நீளமுள்ள கொடிய விஷத்தன்மை கொண்ட கோதுமை நாகம். இந்த பாம்பினை வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளோம்' என்று தெரிவித்தார். இதனால் போலீஸ் நிலையத்தில சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.