கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
நெல்லையில் கருணாநிதி பிறந்த நாள் விழாவையொட்டி அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நெல்லையில் கருணாநிதி பிறந்த நாள் விழாவையொட்டி அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மத்திய மாவட்ட தி.மு.க.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் நெல்லை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அண்ணா சிலை அருகே அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் தலைமை தாங்கி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேயர் பி.எம்.சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாலைராஜா, ஏ.எல்.எஸ்.லட்சுமணன், கவுன்சிலர் நித்திய பாலையா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஒடிசாவில் ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
அப்துல் வகாப் எம்.எல்.ஏ.
நெல்லை வண்ணார்பேட்டையில் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. தலைமையில் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் எம்.பி. வசந்தி முருகேசன் மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மண்டல தலைவர் பிரான்சிஸ், மூளிகுளம் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு அங்கு வைக்கப்பட்டிருந்த படத்திற்கு அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
திராவிடர் கழகம்
நெல்லை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தச்சநல்லூரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மாவட்ட செயலாளர் வேல்முருகன், மாவட்ட காப்பாளர் இரா.காசி, தி.மு.க. மாவட்ட பொருளாளர் வண்ணை சேகர், முரசொலி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு பாளையங்கோட்டை மண்டல தலைவர் பிரான்சிஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கவுன்சிலர் ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பரப்பாடி
பரப்பாடியில் நடைபெற்ற விழாவுக்கு இலங்குளம் பஞ்சாயத்து தலைவர் வி.இஸ்ரவேல் பிரபாகரன் தலைமை தாங்கினார். நாங்குநேரி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் எஸ்.அருள்ராஜ் டார்வின் முன்னிலை வகித்தார். விழாவில் ஏழை மக்களுக்கு இலவச வேட்டி-சேலைகள் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கருணாநிதி பிறந்த நாள் விழாவையொட்டி, இட்டமொழி, அழகப்பபுரம் ஆகிய ஊர்களில் இஸ்ரவேல் பிரபாகரன் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். பரப்பாடி அருகே உள்ள கல்மாணிக்கபுரம் அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் உணவு வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருள்ராஜ் டார்வின், மாவட்ட பிரதிநிதி மா.லிங்கேசன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி சேகர், ஊராட்சி துணைத்தலைவர் விஜி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆதரவற்றோருக்கு உணவு
நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நாங்குநேரியில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு முன்பு அலங்கரிக்கப்பட்ட கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து நாங்குநேரியில் உள்ள ஓசானம் அன்பு இல்லத்தில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கினார். நிகழ்ச்சியில் யூனியன் துணைத்தலைவர் ஆர்.இசக்கிப்பாண்டி, கட்சி நிர்வாகி வெங்கட்ராயபுரம் வாசுதேவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் எஸ்.கே.சீனிதாஸ், சகுந்தலா, இஸ்ரவேல் பிரபாகரன், செந்தில்வேல், மாவட்ட மகளிரணி துணைத்தலைவர் சந்திரகலா, இளைஞரணி நிர்வாகிகள் அருள்ராஜ் டார்வின், சின்னத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு ஏமன்குளம், தெற்கு விஜயநாராயணம், தளபதிசமுத்திரம், பாணாங்குளம், மூன்றடைப்பு, மருதகுளம், வாகைகுளம் புதுக்குறிச்சி ஆகிய ஊர்களில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
நாங்குநேரி யூனியன் மன்னார்புரத்தில் நாங்குநேரி ஒன்றிய கவுன்சிலர் நல்லாசிரியர் அகஸ்டின் கீதராஜ் ஏற்பாட்டில், நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மேலும் ஏழைகளுக்கு இலவசமாக அரிசி பைகள் நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டது.