நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கருணாநிதி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், அரசுத்துறை செயலாளர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சென்னை,
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், அரசுத்துறை செயலாளர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கருணாநிதியின் நூற்றாண்டு விழா ஜூன் 3-ந் தேதி கட்சி சார்பில் சிறப்பாக கொண்டாடப்படும். அதே நேரத்தில் அரசு சார்பிலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் என்னென்ன நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்பது பற்றியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக ஆலோசனை நடத்தினார். அப்போது பல்வேறு முக்கிய அறிவுரைகளை வழங்கினார். கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-
லைஞர் நூற்றாண்டு விழா என்பது கலைஞர் ஆற்றிய பணிகளை நினைவு கூர்வதாக இருக்க வேண்டும். நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர். எனவே அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் விழாவாக இந்த விழாவை நடத்த வேண்டும். 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக அமர்ந்தவர் தலைவர் கலைஞர். 13 முறை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர். தமிழக மேல்-சபை உறுப்பினராகவும் அமர்ந்து அரிய விவாதங்களை எடுத்து வைத்தவர்" என்றார்.