விழுப்புரம் மாவட்டத்தில்கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்அமைச்சர் பொன்முடி பேச்சு

விழுப்புரம் மாவட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி பேசினாா்.

Update: 2023-05-17 18:45 GMT


விழுப்புரத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி எம.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் ஆர். லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் ஜெயச்சந்திரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ், மாவட்டதுணை செயலாளர்கள் முருகன், இளந்திரையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சரும், தி.மு.க. மாநில துணை பொதுச் செயலாளருமான பொன்முடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். அனைத்து இடங்களிலும் கட்சிக்கொடியேற்றி, ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும். மேலும், கட்சியில் உறுப்பினர் சேர்க்கும் பணியை துரிதப்படுத்துதல் போன்ற பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் கல்பட்டுராஜா, முருகன், எம். முருகன் தெய்வசிகாமணி, மும்மூர்த்தி, முருகவேல், ரவிச்சந்திரன், தங்கம், வேம்பிரவி, முருகன், நகர செயலாளர்கள் சக்கரை, வளவனூர் ஜீவா, நகர துணை செயலாளர் புருஷோத்தமன், பொருளாளர் இளங்கோ, நகர மன்ற உறுப்பினர்கள் மணவாளன், பத்மநாபன், புல்லட் மணி மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்