கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாள் விழா
திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாள் விழா நடந்தது. தேவராஜி எம்.எல்.ஏ. அஞ்சலி செலுத்தினார்.
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா மற்றும் பிறந்தநாள் விழா வாணியம்பாடியில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.
கருணாநிதி உருவப்படத்துக்கு திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து ஒடிசா மாநில ெரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ஆ.சம்பத்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் மு.அசோகன், வாணியம்பாடி நகர செயலாளர் வி.எஸ்.சாரதிகுமார், ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.தாமோதரன்,
ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஞானவேலன், நாட்டறம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.சாமுடி, திருப்பத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.ஆர்.திருப்பதி, உதயேந்திரம் பேரூராட்சி செயலாளர் ஆ.செல்வராஜ், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தே.பிரபாகரன், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு அணி அமைப்பாளர் சையத் அபீப்தங்கள்,
மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் எஸ்.ராஜா மற்றும் நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
-
3 காலம்