கருமாண்டாம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Update: 2022-07-06 15:46 GMT

ஊஞ்சலூர்அருகே உள்ள கருமாண்டாம்பாளையத்தில் மிகவும் பழமையான பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் கற்பக விநாயகர், கருப்பண்ணசாமி, பொட்டுசாமிக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு திருப்பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் கோவிலுக்கு புனிதநீர் கொண்டுவந்தார்கள். அதைத்தொடர்ந்து பல்வேறு யாகபூஜைகள் நடந்தன. பின்னர் நேற்று காலை புனிதநீர் ஊற்றி அனைத்து சாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார்கள். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

---------------

Tags:    

மேலும் செய்திகள்