பெரியகருப்பராயன் கோவில் திருவிழா

பெரியகருப்பராயன் கோவில் திருவிழா

Update: 2022-07-27 11:42 GMT

சேவூர்

சேவூர் அருகே உள்ள போத்தம்பாளையம் பெரியகருப்பராயன் கோவில் திருவிழா நடத்துவதில் இரு பிரிவினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கோவில் திருவிழா நடத்த அவினாசி தாசில்தார் தடை விதித்து இருந்தார். கோவில் திருவிழா நடத்த அனுமதி வழங்க வேண்டும் என ராயர்பாளையம், சுள்ளிப்பாளையம், வடுகபாளையம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த குல தெய்வ பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்டு விசாரித்த தாசில்தார் ராஜேஷ், வாண வேடிக்கை இல்லாமல் எளிமையாக அனைவரும் ஒற்றுமையாக திருவிழா நடத்திக்கொள்ளலாம் என அறிவித்தார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு கோவில் திருவிழா சாமி சாட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு ஆடி திருவிழா நடைபெற உள்ளது. இதில் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்து வரும் குலதெய்வ பொதுமக்கள் 2 ஆயிரம் ஆட்டுக்கிடாய்களை வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்