அரியலூரில் கார்த்திகை தீபவழிபாடு
அரியலூரில் கார்த்திகை தீபவழிபாடு நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை அன்று பொதுமக்கள் வீடுகளை தூய்மைப்படுத்தி மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகள் மற்றும் பித்தளை வழக்குகளில் தீபங்கள் ஏற்றுவது வழக்கம். அவ்வாறு தீபங்கள் ஏற்றுவதால் வீட்டில் நல்லெண்ணங்கள் வலுப்பெறும் என்பது நம்பிக்கை. நேற்று கார்த்திகை தீபத்திருநாளையொட்டி பொதுமக்கள் தங்களது வீடுகளில் அகல் விளக்குகளை ஏற்றி இறைவனை வழிபட்டனர். அதைபோன்றே சொக்கப்பனை கொளுத்துவது ஐதீகம். அரியலூர் பெரிய அரண்மனைதெருவில் அமைந்துள்ள சக்தி விநாயகர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதனைப் போன்றே அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோவில்கள் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. சொக்கப்பனை கொளுத்திய பிறகு கிடைத்த சாம்பல் மற்றும் பனை குச்சிகளை போட்டி போட்டு கொண்டு பக்தர்கள் அள்ளி சென்றனர்.