கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

விருத்தாசலம் கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2023-06-07 18:45 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் திரு.வி.க. நகரில் கற்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டு கடந்த 5-ந் தேதி மகா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து மகாலட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, முதல் கால யாகசாலை பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் கோ பூஜை, அஸ்வ பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, நவகிரக ஹோமம், மூன்றாம் கால யாகசாலை பூஜை, அஷ்டபந்தனம் சாற்றுதல், மகா தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேக நாளான நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம், தத்துவார்ச்சனை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து யாக சாலையில் இருந்து மேள, தாளம் முழங்க கடம் புறப்பட்டு சென்று காலை 10 மணிக்கு கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்