கர்நாடக மாநில மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது

மாமண்டூர் அருகே கர்நாடக மாநில மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-23 18:58 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரியை அடுத்த மாமண்டூர் சந்திப்பு பகுதியில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் சாக்குப்பையுடன் வந்த நபரை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அதில் அவர் திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் பகுதியைச் சேர்ந்த குமார் (வயது 45) என்பதும், கர்நாடக மாநில மது பாட்டில்கள் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து அவர் கடத்தி வந்த 44 புல் மது பாட்டில்களையும், இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்