கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகள் பறிமுதல்
கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகள் காருடன் பறிமுதல் செய்யப்பட்டது.
வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் வாணியம்பாடியை அடுத்த செட்டியப்பனூர் கூட்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் நிறுத்த முயன்றனர். இதனால் காரை ஓட்டி வந்தவர் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதனையடுத்து போலீசார் காரை சோதனை செய்த போது, அதில் கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகள் கிடந்தன. உடனே போலீசார் 1,248 மதுபாக்கெட்டுகள் அடங்கிய அட்டை பெட்டிகளுடன் காரை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.