தமிழகத்தின் கோரிக்கையை எக்காலத்திலும் கர்நாடகா ஏற்றதில்லை - அமைச்சர் துரைமுருகன் பேட்டி

தமிழகத்தின் கோரிக்கையை எக்காலத்திலும் கர்நாடகா ஏற்றதில்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்

Update: 2023-09-20 11:45 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் காவிரி தண்ணீரை கர்நாடகம் முறையாக திறந்து விடாத நிலையில் மத்திய அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதற்காக மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவினர் நேற்று சந்தித்து பேசினார்கள். கோரிக்கை மனுவும் அளித்தனர். ஆனால் மத்திய மந்திரி தமிழகத்துக்கு திருப்தி அளிக்கும் வகையில் பதில் சொல்லவில்லை. 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவில் சொல்வதாக தெரிவித்தார். காவிரி தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் கர்நாடக அரசு அவசர மனுவை தாக்கல் செய்து உள்ளது.

இந்தநிலையில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கர்நாடக அணைகளில் தண்ணீர் இருக்கிறதா? இல்லையா? என்பதை காவிரி நீர் ஒழுங்காற்று குழுதான் உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் எந்த கோரிக்கையையும், இதுவரை கர்நாடக அரசு ஏற்றுக்கொண்டதில்லை.

காவிரி விவகாரம் தொடர்பாகத் தீர்ப்பாயம் அமைக்கலாம் என்று கூறினோம், அதை அவர்கள் மறுத்தார்கள். நாம் பெற்ற அனைத்து உரிமையும் சுப்ரீம் கோர்ட்டு மூலமே பெறப்பட்டது. தமிழகத்தின் கோரிக்கை குறித்து மத்திய நீர்வளத்ஹ்டுறை மந்திரியிடம் முறையிட்டோம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்