கர்நாடக பா.ஜ.க. ஊழல் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும்-மதுரையில் சீமான் பேட்டி

கர்நாடக பா.ஜ.க. ஊழல் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும் என்று மதுரையில் சீமான் கூறினார்.

Update: 2023-04-16 20:15 GMT

மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-

பேரணி என்றால் அதில் ஒரு நோக்கம் இருக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நடத்த வேண்டும் என்பதற்காக வலுக்கட்டாயமாக நடத்துகின்றனர். அதில் ஒன்றும் பெரிய செய்தி இல்லை. தி.மு.க. அரசு, கேட்காததை கொடுக்கிறார்கள். கேட்பதை கொடுப்பதில்லை. எங்கள் பெண்கள் எல்லாம் வீதியில் வந்து இலவச பஸ் பாஸ் கேட்டார்களா.? குடும்ப அட்டைக்கு ஆயிரம் ரூபாய் வேண்டும் என கேட்டார்களா.? கேட்காதது எல்லாம் கொடுக்கிறார்கள். ஆனால் மீன் பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு கொடுக்கும் உதவி தொகை போதவில்லை என கேட்கிறார்கள். அதை அரசு கொடுக்க வேண்டும். அண்ணாமலை அனைத்து கட்சி ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் என கூறி இருக்கிறார். அதைப்போல் அவர்கள் கட்சியின் ஊழல் பட்டியலும், கூட்டணி கட்சியின் ஊழல் பட்டியலும் வெளியிட வேண்டும். கர்நாடக பா.ஜனதா கட்சி ஊழல் பட்டியலையும் வெளியிட வேண்டும். அண்ணாமலை ஒவ்வொன்றாக செய்வார் என்று நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்