காரியாபட்டி பேரூராட்சி கூட்டம்

காரியாபட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-11-30 19:27 GMT

காரியாபட்டி, 

காரியாபட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் செந்தில் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ரூபிசந்தோசம் முன்னிலை வகித்தார். காரியாபட்டி பேரூராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க 2.0 அம்ரூத் திட்டத்தில் திட்ட மதிப்பீடு செய்து தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. இந்த கோரிக்கையின்படி காரியாபட்டிக்கு குடிநீர் ஆதாரத்தை உருவாக்க 2.0 அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.10.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. காரியாபட்டி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று குடிநீர் திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கும், அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்க்கும் காரியாபட்டி பேரூராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருச்செந்தூர், தூத்துக்குடி செல்லக்கூடிய விரைவு பஸ்கள் நகருக்குள் வந்து செல்ல வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் தி.மு.க. பேரூராட்சி கவுன்சிலர்கள் லியாக்கத்அலி, முகமதுமுஸ்தபா, சங்கரேஸ்வரன், நாகஜோதி, சரஸ்வதி, தீபா, செல்வராஜ், முத்துக்குமார், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ராமதாஸ், சத்தியபாமா, திருக்குமாரி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் முனீஸ்வரி உட்பட அனைத்து பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்