சின்னபள்ளத்தூர் அரசு பள்ளியில்மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி

Update: 2023-02-17 19:00 GMT

பென்னாகரம்:

பென்னாகரம் அருகே சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலையான கராத்தே பயிற்சி நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனி தலைமை தாங்கினார். கராத்தே மாஸ்டர் நந்தன் மாணவிகளுக்கு கராத்தே பயிற்சியளித்தார். மேலும் மாணவிகள் தங்களை எவ்வாறு தற்காத்து கொள்ள வேண்டும் என்றும், தற்காப்பு பயிற்சிகள் என்னென்ன என்பது குறித்து செயல் விளக்கம் அளித்தார்.

இதனிடையே அனைத்து மாணவர்களுக்கும் இயற்கையை பாதுகாப்பதற்காக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில் பள்ளி ஆசிரியர்கள் வளர்மதி, கல்பனா, ராஜேஸ்வரி, ரேகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்