சேலம்
சேலம் மாவட்ட கராத்தே சங்கத்தால் தேர்ச்சி பெற்று திருச்சியில் நடந்த மாநில கராத்தே போட்டியில் சேலம் மாவட்ட கராத்தே சங்க மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 9 தங்கம், 12 வெள்ளி, 8 வெண்கல பதக்கங்களை பெற்றனர். மாணவன் யஷ்வந்த், சஞ்சய், சப்தரிஷி, கபில், கபீஷ், விஷால், ரிஷிகேஷ், சுதன், சிந்தா ஹரி ஆகியோர் தங்கப்பதக்கமும், எஸ்தர், தனுசியா, திருப்பதி, ஜவகர் ஆகியோர் வெள்ளி பதக்கமும், அச்சுதகேஷவ், சுஜய், சஞ்சித் ஸ்ரீயாத்ரா, தக்ஷனா, ரிஸ்வந்த் ஆகியோர் வெண்கல பதக்கமும் பெற்றனர்.
போட்டியில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு இலவச டீசர்ட் வழங்கி சேலம் மாவட்ட கராத்தே சங்க தலைவர் ராஜா, செயலாளர் சரவணன், துணை தலைவர்கள் வெங்கடகிருஷ்ணன், உதயச்சந்திரன், சரவணன், அன்பழகன், பயிற்சியாளர்கள் ஹரிஹரன், விவேக் ஆகியோர் பாராட்டினர்.