கறம்பக்குடி அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கறம்பக்குடி அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-10-17 18:56 GMT

கறம்பக்குடி:

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் உள்ளிட்ட 15 விதமான கல்வி கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கறம்பக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மருதன்கோன் விடுதியில் உள்ள கல்லூரி முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்வி கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கல்லூரி மாணவர் செயலாளர் அன்பரசன் தலைமை தாங்கினார். இந்திய மாணவர் சங்க மாவட்ட துணை செயலாளர்கள் பாலாஜி, பிரியங்கா ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்