குன்னூரில் கரக ஊர்வலம்

தேவி கருமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி குன்னூரில் கரக ஊர்வலம் நடந்தது.

Update: 2023-05-21 23:15 GMT

குன்னூர்

குன்னூர் அருகே பேரக்ஸ் சின்னவண்டி சோலை கிராமத்தில் தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மே மாதம் கரக திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 119-வது ஆண்டு கரக திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் பெண்களுக்கு வளையல் அணிக்கப்பட்டது. மாலையில் திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜை உள்பட பல்ேவறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதையடுத்து சுவாமி திருவீதி உலா மற்றும் கரக ஊர்வலம் மேளதாளம் முழங்க நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். நேற்று முன்தினம் பக்தர்கள் கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்தநிலையில் நேற்று குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விரதமிருந்த பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்