கண்டதேவியில் வருமுன் காப்போம் மருத்துவ சிறப்பு முகாம்
கண்டதேவியில் வருமுன் காப்போம் மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது.
தேவகோட்டை,
தேவகோட்டை ஒன்றியம் கண்டதேவியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. தேவகோட்டை யூனியன் தலைவர் பிர்லாகணேசன், மாவட்ட கவுன்சிலரும் சிவகங்கை மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளருமான நாகனி செந்தில்குமார், கண்டதேவி ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரவல்லிமுருகன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து முகாமை தொடங்கி வைத்தனர். யூனியன் தலைவர் பிர்லா கணேசன் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ பெட்டகங்கள் வழங்கினார். முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, ரத்த சர்க்கரை அளவு கண்டறிதல், எச்.ஐ.வி. கண்டறிதல், சளி மாதிரி பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில், சிவகங்கை மாவட்ட மருத்துவ துறையினர் கலந்து கொண்டனர்.இதில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்துகொண்டனர்.