வரும்முன் காப்போம் மருத்துவ முகாம்

வரும்முன் காப்போம் மருத்துவ முகாம்

Update: 2022-12-31 20:10 GMT

ஒரத்தநாடு ஒன்றியம் கருக்காடிப்பட்டி ஊராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமினை ஒரத்தநாடு ஒன்றியக்குழு தலைவர் பார்வதிசிவசங்கர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். கருக்காடிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சேதுஅருள் வரவேற்றார். ஒரத்தநாடு வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், பொய்யுண்டார்கோட்டை ஊராட்சி மன்ற தலைவரும், ஒரத்தநாடு மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான செ.ரமேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வட்டார மருத்துவ அலுவலர் ராஜராஜன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் 1300 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர். முடிவில் வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் சபாபதி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்