கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

Update: 2023-08-18 16:58 GMT


தளி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தீபாலபட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தளி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.அப்போது கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 29) கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.மேலும் அவரிடம் இருந்த கஞ்சா 550 கிராம், ரூ 6 ஆயிரத்து 450 மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்