தண்டவாள பராமரிப்பு பணி:கன்னியாகுமரி-புனே எக்ஸ்பிரஸ் மாற்று வழியில் இயக்கம்

தண்டவாள பராமரிப்பு பணிக்காக கன்னியாகுமரி-புனே எக்ஸ்பிரஸ் மாற்று வழியில் இயக்கப்படுகிறது.

Update: 2022-10-30 18:45 GMT

நாகர்கோவில்:

தெற்கு ரெயில்வேயின் திருவனந்தபுரம் கோட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கேரள மாநிலம் கொல்லம்-கோட்டயம்-எட்டுமனூர் மற்றும் எர்ணாகுளம்- திருச்சூர் ஆகிய பகுதிகளில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை-குருவாயூர் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 2-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 18 நாட்களுக்கு குருவாயூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லாது. இந்த ரெயில் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும். கன்னியாகுமரி- புனே வரை செல்லும் தினசரி புனே எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 2, 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் மட்டும் மாற்றுப்பாதையாக ஆலப்புழா வழியாக செல்லும். அதிலும் அம்பலபுழா, ஹரிபாடு, ஆழப்புலா, செறுதலா மற்றும் எர்ணாகுளம் சந்திப்பு ஆகிய ரெயில் நிலையங்களில் தற்காலிகமாக நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்