கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் அன்னதான உண்டியல் வசூல் ரூ.2½ லட்சம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.2½ லட்சம் வசூலானது.

Update: 2022-12-28 18:45 GMT

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.2½ லட்சம் வசூலானது.

கன்னியாகுமரியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு மதிய வேளையில் கோவிலில் அன்னதானம் வழங்கும் வகையில் தமிழக அரசு அன்னதான திட்டத்தை திறம்பட செயல்படுத்தி வருகிறது. இதற்கான நிதி மற்றும் அன்னதான உண்டியல் மூலம் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அன்னதான உண்டியலை மாதத்திற்கு ஒரு முறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதுபோல் நேற்று அன்னதான உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சுஜித் தலைமையில், நாகர்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளரும் பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், பொருளாளர் ரமேஷ் முன்னிலையில் கோவில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் வருமானமாக ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்து 334 வசூலாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்