கந்துவட்டி கேட்டு மிரட்டிய 2 பெண்களுக்கு வலைவீச்சு

மேலப்பாளையத்தில் கந்துவட்டி கேட்டு மிரட்டிய 2 பெண்களுக்கு வலைவீச்சு

Update: 2022-06-09 22:14 GMT

நெல்லை:

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் உத்தரவின்பேரில், துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் நேரடி மேற்பார்வையில், நெல்லை மாநகர பகுதியில் கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

இந்தநிலையில் மேலப்பாளையத்தை சேர்ந்த ரசூல் மைதீன் மனைவி உசேன்பாத் (வயது 50) என்பவர் அதே பகுதியை சேர்ந்த தெய்வானை, லதா ஆகியோரிடம் ரூ.4 லட்சம் வட்டிக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. அந்தப் பணத்திற்கு அவர்கள் கந்து வட்டி கேட்டு உசேன் பாத்தை மிரட்டி வந்துள்ளனர். இதுகுறித்து உசேன்பாத் மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துசுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் ஆகியோர் விசாரணை நடத்தி தெய்வானை, லதா ஆகியோர் மீது கந்துவட்டி வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்