கந்துவட்டிக்கு ஓட்டலை எழுதி கேட்டு மிரட்டல்: மதுரையில் ஓட்டல் அதிபர் தற்கொலை முயற்சி- 2 பேர் மீது வழக்கு

கந்துவட்டிக்காக ஓட்டலை எழுதிக்கேட்டதால் ஓட்டல் அதிபர் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

Update: 2023-03-09 20:47 GMT


கந்துவட்டிக்காக ஓட்டலை எழுதிக்கேட்டதால் ஓட்டல் அதிபர் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

ஓட்டல் அதிபர்

மதுரை திருப்பாலையை சேர்ந்தவர் அழகுராஜா(வயது 46). புதூரில் ஓட்டல் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை தின்றுள்ளார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அழகுராஜாவை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தற்கொலைக்கு முயன்ற ஓட்டல் அதிபர் அழகுராஜாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. போலீசாரிடம் அவர் கூறுகையில், புதூரில் ஓட்டல் நடத்தி வருகிறேன். சில மாதங்களுக்கு முன்பு தொழிலுக்காக மதுரையைச் சேர்ந்த ஜெயக்குமார், கார்த்திகேயன் ஆகிய 2 பேரிடமும் ரூ.6 லட்சம் கடன் வாங்கினேன். இதற்கான வட்டியுடன் அசலையும் சேர்த்து கட்டி விட்டேன். இருந்தபோதிலும் அவர்கள் என்னிடம் மேலும் கந்து வட்டி கேட்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

2 பேர் மீது வழக்கு

அவர்கள் கந்து வட்டிக்கு ஈடாக புதூரில் உள்ள ரூ.1 கோடி மதிப்புடைய ஓட்டலை எழுதிக் கொடுக்கும்படி மிரட்டி வருகின்றனர். அவர்களது மிரட்டல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே வாழ்க்கையில் விரக்தி அடைந்த நான் தற்கொலை செய்ய முயற்சி செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அண்ணாநகர் போலீஸ் உதவி கமிஷனர் சூரக்குமார் மேற்பார்வையில் புதூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அழகுராஜாவிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டல் விடுத்ததாக ஜெயக்குமார், கார்த்திகேயன் ஆகிய 2 ேபர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்