கண்ணதாசன் பிறந்தநாள் விழா

சிறுகூடல்பட்டியில் கண்ணதாசன் இலக்கியப் பேரவை சார்பில் கண்ணதாசன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-06-24 18:35 GMT

திருப்பத்தூர்,

சிறுகூடல்பட்டியில் கண்ணதாசன் இலக்கியப் பேரவை சார்பில் கண்ணதாசன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு இலக்கியப் பேரவை தலைவர் எஸ்.எம்.பழனியப்பன் தலைமை தாங்கினார். விழாவில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. கலந்து கொண்டார்.

பின்னர் அவரது நினைவு இல்லத்தில் 95 கவிஞர்களின் சங்கமம் கவிபாடும் நிகழ்ச்சியும் பாராட்டு விழாவும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் சிறப்புரையாற்றி பரிசும் கேடயமும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் விராமதி மாணிக்கம், குன்றக்குடி சுப்பிரமணியன், இளைஞரணி துணை அமைப்பாளர் மணக்குடி ரமேஷ், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலையில் மலையரசியம்மன் கோவிலில் சிறப்பு தீபாராதனை நடைபெற்று கண்ணதாசனுக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பஸ் நிறுத்தம் அருகே நிறுவப்பட்டுள்ள திருவுருவ சிலைக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. மாலையணிவித்து மரியாதை செய்தார்.

நிகழ்ச்சியில் லெனின் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் கணேசன், கீழச்சிவல்பட்டி நகர் தலைவர் அழகுமணிகண்டன், வட்டாரத் தலைவர்கள் பன்னீர்செல்வம், பிரசாந்த், இளைஞர் காங்கிரஸ் தலைவர் சேதுமெய்யப்பன், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரெத்தினம், தேவிகாபழனிவேல்ராஜன், ஊர் அம்பலக்காரர் வைரவன், வீரப்பன், மோகன் செட்டியார், சுப்பிரமணியன், பூவாழை ஆகியோர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்