மழை வேண்டி கஞ்சிக்கலய ஊர்வலம்

தூத்துக்குடியில் மழை வேண்டி கஞ்சிக்கலய ஊர்வலம் நடந்தது.

Update: 2022-08-31 13:25 GMT

தூத்துக்குடியில் மழை வேண்டி கஞ்சிக்கலய ஊர்வலம் நடந்தது.

கஞ்சிக்கலய ஊர்வலம்

தூத்துக்குடி திரு.வி.க நகரில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடத்தில் மழைவளம் வேண்டியும், விவசாயம் செழிக்கவும், மக்கள் நலமுடன் வாழவும், தொழில்வளம் பெருகவும், கல்வி அறிவு சிறக்கவும் வேண்டி அதிகாலையில் கஞ்சிக்கலய ஊர்வலம் நடந்தது.

ஊர்வலம் முத்துமாரி அம்மன் கோவில் வளாகத்தில் இருந்து தொடங்கியது. ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சக்திபீடத்தை வந்தடைந்தது. அங்கு அன்னைக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.

கல்வி உதவித்தொகை

தொடர்ந்து உலக மக்கள் தொற்று நோயில் இருந்து விடுபட வேண்டி கருவறை அன்னைக்கு பக்தர்கள் பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். நிகழ்ச்சியை முன்னிட்டு ஏழை மாணவிக்கு கல்வி உதவித்தொகை, மற்றும் பெண்களுக்கு சேலைகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிகளில் தர்மகர்த்தா அய்யம்பெருமாள், பேராசிரியை இந்திராகாந்தி, ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்திமுருகன், கூட்டுறவு பண்டகசாலை பொதுமேலாளர் கந்தசாமி, அனல்மின் நிலைய உதவி செயற்பொறியாளர் முருகேசன், ஆன்மிக இயக்க மாவட்ட பொருளாளர் கண்ணன், இளைஞர் அணி செல்லத்துரை, வேள்விக்குழு செயலாளர் கிருஷ்ணநீலா, பிரசார செயலாளர் முத்தையா, சக்திபீட துணைத்தலைவர் திருஞானம், பொருளாளர் அனிதா, மகளிர் அணி பிரமிளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்