முத்துமாரியம்மன் கோவிலில் கஞ்சி கலய ஊர்வலம்
அக்கராயப்பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில் கஞ்சி கலய ஊர்வலம்
கச்சிராயப்பாளையம்
கச்சிராயப்பாளையம் அருகே உள்ள அக்கராயப்பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில் கஞ்சி ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக காலை 10 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து செவ்வாடை அணிந்த பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமியர்கள் மேள, தாள இசையுடன் கஞ்சி கலயங்களை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக புறப்பட்டனர். கோவில் முன்பிருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. பின்னர் கோவில் முன்பு வைக்கப்பட்ட கலயத்தில் இருந்த கஞ்சியை அம்மனுக்கு ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.