போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு

போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு

Update: 2023-02-09 12:32 GMT

குண்டடம்

குண்டடம் ஒன்றியத்துக்குட்பட்ட ஜோதியம்பட்டி ஊராட்சி உள்பட அனைத்து ஊராட்சிகளிலும் காவல்துறை மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து போதைப்பொருள் இல்லா கிராமம் எங்கள் கிராமம் என்ற பெயரில் பதாகை அச்சிடப்பட்டு ஊரின் மையப்பகுதியில் வைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அப்போது பொதுமக்கள் மற்றும் போலீசார் போதைப்பொருட்களான புகையிலை, கஞ்சா போன்ற பொருட்களை எங்கள் கிராமப்பகுதிக்குள் பயன்படுத்தவோ விற்பனைக்கு அனுமதி கொடுக்க மாட்டோம் போதைப்பொருளில்லா கிராமமாக மாற்றுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் குண்டடம் போலீசார், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Tags:    

மேலும் செய்திகள்