கணியூரில் தொடர் திருட்டு...போலீசார் எச்சரிக்கை

Update: 2023-05-30 16:32 GMT


மடத்துக்குளத்தையடுத்த கணியூரில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.இதுகுறித்து பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நோட்டம்

கோடை விடுமுறைக் காலம் என்பது மாணவர்களுக்கு கொண்டாட்டமான காலமாக உள்ளது.அதேநேரத்தில் அது திருடர்களுக்கும் கொண்டாட்டமான சூழலை உருவாக்கி விடுகிறது என்று தான் சொல்ல வேண்டும்.கோடை விடுமுறையில் சொந்த ஊர், உறவினர்கள் வீடு மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு செல்வது என பலவிதமாக திட்டமிடுகிறார்கள்.பொதுமக்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியூர்களுக்கு செல்லும் நிலையில் இதனை நோட்டமிடும் திருடர்கள் கதவை உடைத்து வீடு புகுந்து கைவரிசை காட்டி விடுகிறார்கள்.திருடர்கள் பகல் நேரத்தில் விற்பனையாளர்களைப் போலவோ, வேலை தேடுபவர்கள் போலவோ அல்லது வீடு தேடுபவர்கள் போலவோ வந்து நோட்டமிடுகின்றனர்.அப்போது தொடர்ச்சியாக பூட்டியிருக்கும் வீடுகள் அவர்களின் இலக்காகிறது. அந்தவகையில் கடந்த சில வாரங்களாக 8-க்கும் மேற்பட்ட வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன.வீடுகளில் பணம், நகை போன்றவற்றை கொள்ளையடித்து சென்றவர்கள் ஒரு வீட்டில் காரில் உள்ள விலை உயர்ந்த சவுண்ட் சிஸ்டத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.ஆனால் பலரும் முறையாக போலீசில் புகார் தெரிவிக்க விரும்புவதில்லை.இது திருடர்களுக்கு சாதகமான விஷயமாக மாறி விடுகிறது.

ரோந்து

இதுகுறித்து போலீசார் கூறியதாவது'வெளியூர்களுக்கு செல்பவர்கள் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்து விட்டு செல்ல வேண்டும்.இதனால் அந்த பகுதியில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணிக்க ஏதுவாக இருக்கும்.மேலும் அனைத்து வீதிகளிலும் குடியிருப்போர் சங்கங்கள் மூலம் பொதுமக்கள் கண்காணிப்புக் கேமராக்கள் பொறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கு உதவியாக இருக்கும்.மேலும் தங்களது பகுதியில் சந்தேகத்துக்கிடமான புதிய நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.எல்லாவற்றுக்கும் மேலாக வீட்டைப் பூட்டி விட்டு வெளியூர்களுக்கு செல்பவர்கள் தாங்கள் வெளியூரில் இருக்கும் விபரங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.இது திருடர்களுக்கு அழைப்பு விடுக்கும் செயலாக மாறிவிடும் அபாயம் உள்ளது.எனவே திருட்டு சம்பவங்களைத் தடுக்க பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்'என்று போலீசார் தெரிவித்தனர்.

கோரிக்கை

போலீசார் பொதுமக்களிடம் இகணியூரில் தொடர் திருட்டு...போலீசார் எச்சரிக்கைணக்கமான விதத்தில் பழகினால் மட்டுமே போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் அணுகுவார்கள்.மேலும் திருட்டு வழக்குகளில் வழக்குப் பதிவு செய்வதற்கு போலீசார் தயக்கம் காட்டுவதாகவும் புகார் தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் தொடர் திருட்டு சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் போலீசார் ரோந்துப்பணியை அதிகப்படுத்த வேண்டும்.குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்