தூத்துக்குடி புத்தக திருவிழாவில் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு கனிமொழி எம்.பி பரிசளிப்பு
தூத்துக்குடியில் நடந்த புத்தக திருவிழாவில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. நிறைவு விழாவில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
தூத்துக்குடியில் நடந்த புத்தக திருவிழாவில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. நிறைவு விழாவில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
புத்தக திருவிழா
தூத்துக்குடிமாவட்ட நிர்வாகம் சார்பில் 3-வது புத்தகதிருவிழா தூத்துக்குடியில் நடந்தது. இந்த புத்தக கண்காட்சியில் புத்தகம் படிக்கும் பழக்கத்தை மேம்படுத்தும் வகையிலும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் 24 மணி நேரமும் புத்தகங்களைப் படிக்கும் வகையில் ஒரு தனியான புத்தகஅரங்கு அமைக்கப்பட்டது. இந்த அரங்கில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அமர்ந்து 24 மணிநேரமும் புத்தகங்களை விடுதிகாப்பாளர்கள் மேற்பார்வையில் படித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த புத்தக கண்காட்சியில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
இந்த புத்தக கண்காட்சியை பார்வையிடுவதை ஊக்குவிக்கவும், புத்தக வாசிப்பை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கவும் புத்தகம் வாங்கும் முதல் 3 அதிர்ஷ்ட வெற்றியாளர்களுக்கு முறையே ரூ.1 லட்சம், ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இதே போன்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, நடனப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
பரிசு
இந்த புத்தக திருவிழா நிறைவுநாள் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், உதவி கலெக்டர் கவுரவ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.