கனிமொழி எம்.பி. பிறந்தநாள் விழா:அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 14 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. பிறந்தநாளை முன்னிட்டு அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 14 குழந்தைகளுக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெள்ளிக்கிழமை தங்க மோதிரம் அணிவித்தார்.
தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. பிறந்தநாளை முன்னிட்டு அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 14 குழந்தைகளுக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று தங்க மோதிரம் அணிவித்தார்.
பிறந்தநாள் விழா
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு மகளிர் அணி சார்பில் கேக் வெட்டியும், ஆதரவற்றோர் இல்லங்களில் மதிய உணவு வழங்கியும் கொண்டாடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கி 14 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அணிவித்தார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், அரசு ஆஸ்பத்திரி டீன் சிவக்குமார் மற்றும் கவுன்சிலர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.