கனிமொழி எம்.பி. பிறந்தநாள் விழா

புளியங்குடியில் கனிமொழி எம்.பி. பிறந்தநாள் விழா நடந்தது.

Update: 2023-01-06 18:45 GMT

புளியங்குடி:

புளியங்குடி நகர தி.மு.க. அலுவலகத்தில் கனிமொழி எம்.பி. பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு நகர செயலாளர் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் விஜயா சவுந்திர பாண்டியன், நகர அவை தலைவர் வேல்சாமி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் பத்திரம் சாகுல் ஹமீது அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். பின்னர் நகராட்சியில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள், கையுறைகள், முக கவசங்களை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்