காங்கயம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி அலுவககத்தில் தலித் விடுதலை இயக்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ச.கருப்பையா கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது: -
தலித் விடுதலை இயக்கம்
காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக கோவையை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் மூலமாக தற்காலிக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் காங்கயம் நகராட்சியில் 140 நபர்கள் தற்காலிக ஒப்பந்த தூய்மை பணியாளராக பணிபுரிவதற்கு அனுமதி பெற்றுள்ள நிலையில் 80 நபர்கள் பணியாற்றி வருகின்றனர்.
மேலும் தற்போது பணிபுரியும் 80 பணியாளர்களின் வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை ஒப்பந்ததாரர் சார்பில் பெற்று கொண்டு அவர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கி வருகின்றனர். இந்த ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி, இன்சூரன்ஸ் மருத்துவ உதவிகள், சீருடைகள் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் வழங்காமல் முறைகேடு செய்துள்ளனர்.
நடவடிக்கை
எனவே காங்கயம் நகராட்சி ஆணையர் இப்பிரச்னையில் தலையிட்டு காங்கயம் நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களின் விஷயத்தில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டுபிடித்து அதற்குக் காரணமான அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு கொடுக்கும் ேபாது நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.