பொள்ளாச்சி சந்தையில் காங்கேயம் காளை ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை

பொள்ளாச்சி சந்தையில் காங்கேயம் காளை ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை

Update: 2022-11-08 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை நடைபெறும். அதன்படி நேற்று மாட்டு சந்தை நடைபெற்றது. சந்தைக்கு கோவை மாவட்டம் மற்றும் வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. கேரளாவில் இருந்து வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி சென்றனர். மேலும் விவசாய பணிகளுக்கும் மாடுகளை விவசாயிகள் வாங்கி சென்றனர்.

கடந்த வாரத்தை விட மாடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதுகுறித்து மாட்டு வியாபாரிகள் கூறுகையில், பொள்ளாச்சி சந்தைக்கு 2500 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. காங்கயம் பசு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும், காங்கயம் காளை ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும், நாட்டு எருமை ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், மொரா ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும், செர்சி ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது. மீன், கறிக்கோழி விலை குறைவு காரணமாக மாட்டு இறைச்சி விற்பனை குறைந்து உள்ளது என்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்