காங்கயம்
காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜீவிதா ஜவஹர் முன்னிலை வகித்தார். இதில் பாலசமுத்திரம் புதூர், பரஞ்சேர்வழி, சிவன்மலை உள்ளிட்ட 10 ஊராட்சிப் பகுதிகளில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைப்பது, குடிநீர் பணிகளுக்காக மின் மோட்டார் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள், காங்கயம் நகரம் மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் சுற்றுச்சுவர் கட்டுதல், கட்டிட பராமரிப்பு, வர்ணம் பூசுதல் உள்ளிட்ட 87 பணிகளை ஒன்றியப் பொதுநிதி ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட 29 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலாதேவி, ராகவேந்தரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், காங்கயம் ஊராட்சி ஒன்றியப் பொறியாளர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
-------