கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா; ஜி.கே.வாசன் பங்கேற்பு

கோவில்பட்டி கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. விழாவில் ஜி.கே.வாசன் எம்.பி. பங்கேற்றார்.

Update: 2023-01-28 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி கம்மவார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு விழா, ஆண்டு விழா மற்றும் தேசிய கபடி பேட்டியில் வெற்றி பெற்ற மாணவி கற்பகவள்ளிக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளிக்குழு தலைவர் குருசாமி தலைமை தாங்கினார். தாளாளர் கதிர்வேல் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் பத்மாவதி வரவேற்றார். பள்ளி ஆண்டறிக்கையை முதுகலை ஆசிரியை சாந்தி வாசித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., கம்மவார் சங்க தலைவர் ஹரிபாலகன் ஆகியோர் கலந்துகொண்டு கல்வியில் சிறப்பிடம் பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

பள்ளி புதிய கட்டிடம் கட்டுவதற்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாக ஜி.கே.வாசன் எம்.பி. தெரிவித்தார். தேசிய அளவிலான சப்-ஜூனியர் கபடி போட்டியில் தமிழக அணி 2-வது இடம் பெற்றது. இதில் தமிழக அணியில் இடம் பெற்ற கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கற்பக வள்ளியை பாராட்டி ரூ.5 ஆயிரம் பரிசு தொகையை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. வழங்கினார்.

விழாவில் பள்ளி கமிட்டி உறுப்பினர்கள் ஆழ்வார் சாமி, விவேகானந்தன், ரத்தினசாமி, ரமேஷ், செல்லச்சாமி, ராஜாராம், ராகவன், வக்கீல் அழகர்சாமி, பஸ் அதிபர் ராதாகிருஷ்ணன், எஸ்.டி.ஆர்.விஜயசீலன், கோவில்பட்டி யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர் அன்புராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முதுகலை ஆசிரியை இந்திரா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்