தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோவிலில் கம்பர் வழிபாடு

தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோவிலில் கம்பர் வழிபாடு தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர்

Update: 2023-01-07 18:45 GMT

குத்தாலம்:

யாமறிந்த புலவர்களிலே கம்பனைப்போல், வள்ளுவனை போல், இளங்கோவை போல் பூமி தன்னில் யாங்கெனுமே பிறந்ததில்லை என பாரதி மேற்கோள்காட்டிய புலவர்களிலேயே முதலிடத்தை பெறுபவர் கம்பர். கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும் கவி பாடும் என்பார்கள். இத்தகைய சிறப்புகள் பல பெற்ற கம்பர் பிறந்தது மயிலாடுதுறை மாவட்டத்தி்ல் உள்ள தேரழுந்தூர். இவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆண்டுதோறும் அவரது பிறந்த நாள் விழா தேரழுந்தூர் கம்பர் கழகம் மற்றும் புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 93-ம் ஆண்டு கம்பர் விழா நேற்று தேரழுந்தூர் கம்பர் கோட்டத்தில் தொடங்கியது. இதையொட்டி தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோவிலில் கம்பர் வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து கம்பர் இயற்றிய கம்பராமாயண புத்தகங்களையும், சீர் வரிசைகளையும் தமிழ் அறிஞர்கள் தங்கள் தலைகளில் சுமந்து வீதி உலாவாக கம்பர் கோட்டத்தை அடைந்தனர். அங்குள்ள கம்பர் சிலையின் முன்பு தமிழர்கள் அவருக்கு புகழாரம் சூட்டி பேசினர். இதில் தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள், ெபாதுமக்கள் கலந்துகொண்டு பேசினர்.

Tags:    

மேலும் செய்திகள்