கம்பம் அரசு மருத்துவமனையில்சீமாங் சென்டர் கட்டும் பணி தீவிரம்

கம்பம் அரசு மருத்துவமனையில் சீமாங் சென்டர் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2023-10-15 18:45 GMT

கம்பத்தில் அரசு மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு 170-க் கும் மேற்பட்ட உள்நோயாளிகள் படுக்கை, 24 மணி நேரமும் செயல்படும் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவு (ஒருங்கிணைந்த மகப்பேறு பச்சிளம் குழுந்தை கண்காணிப்பு) சீமாங் சென்டர் உள்ளது. இங்கு மாதந்தோறும் சுமார் 200 குழந்தைகள் பிரசவிக்கின்றனர். சீமாங் சென்டரை விரிவுப்படுத்த மத்திய அரசின் தேசிய சுகாதார குழு முடிவு செய்து ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஒரு தரைத்தளம், 2 மாடிகள், 2 லிப்ட் வசதி, சாய்தள பாதை மற்றும் நவீன மருத்துவ கருவிகள், பச்சிளம் குழந்தை பராமரிப்பு மற்றும் கர்ப்பிணிகளுக்கான பிரசவ அறுவை சிகிச்சை அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் 6 மாதத்திற்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று மருத்துவ அலுவலர் பொன்னரசன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்