பள்ளி மாணவரிடம் கமலிகா காமராஜர் நலம் விசாரித்தார்

அரிவாளால் வெட்டப்பட்ட பள்ளி மாணவரிடம் கமலிகா காமராஜர் நலம் விசாரித்தார்.

Update: 2023-08-15 19:45 GMT

நாங்குநேரியில் சகமாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்ட பிளஸ்-1 மாணவர் சின்னத்துரை, அவரின் சகோதரி சந்திராசெல்வி ஆகியோர் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை காங்கிரஸ் மாநில செயலாளர் கமலிகா காமராஜர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், பள்ளி மாணவர்களின் இந்த செயல் வருத்தம் அளிக்கிறது. சாதி எங்கும் இருக்கக்கூடாது. சாதிகள் களையப்பட வேண்டும். இந்தியாவில் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது. பள்ளி மாணவர்கள் தங்கள் கையில் கயிறு கட்டுவதை பள்ளிக்கல்வித்துறை கண்காணித்து சாதி மோதல்களை தடுக்க வேண்டும் என்றார். அப்போது காங்கிரஸ் நிர்வாகி வேணுகோபால் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்