'தமிழ்நாடு வாழ்க' - கவர்னரின் கருத்துக்கு 6 மொழிகளில் கமல்ஹாசன் பதிலடி

‘தமிழ்நாடு வாழ்க’ என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Update: 2023-01-06 14:37 GMT

சென்னை,

சென்னை கிண்டியில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் வித்தியாசமான அரசியல் சூழ்நிலை உள்ளது. தமிழ்நாட்டில் தவறான, எதிர்மறையான அரசியல் அணுகுமுறைகள் இருக்கின்றன. இது ஒழிக்கப்பட வேண்டும். இந்தியா என்பது ஒரே நாடு. தமிழ்நாடு என்று சொல்வதை விட 'தமிழகம்' என்று சொல்வதே சரியாக இருக்கும்' என்றார்.

தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என் ரவி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கவர்னரின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கவர்னரின் கருத்துக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 6 மொழிகளில் பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் 'தமிழ்நாடு வாழ்க' என்று பதிவிட்டுள்ளார். மேலும்,

'இந்தியா வாழ்க' என்று ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்